×  Welcome to Hixic! This Hixic page is tailored for our readers in TamilReturn to English



விஷால் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு..!

'அயோக்யா' படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போவது குறித்து படத்தின் நாயகன் விஷால் மற்றும் பார்த்திபன் தங்கள் கருத்துகளை கூறியுள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கத்தில், விஷால் நடித்துள்ள படம் 'அயோக்யா'. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில், மது தயாரிக்கும் இந்தப் படத்தில் பார்த்திபன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைந்து, ஏப்ரல் 19ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டு இன்று (10ம் தேதி) ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில், முதல் காட்சியை காண ரசிகர்கள் தியேட்டரில் காத்திருந்த நிலையில், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு தேதி அறிவிக்காமல் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இதனால், தியேட்டர்களில் சலசலப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், 'அயோக்யா’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவது குறித்து படத்தின் நாயகன் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எனது கடின உழைப்புதான் 'அயோக்யா’. இந்தப் படம் ரிலீஸாகும் வரை காத்திருப்பேன். நடிகன் என்பதையும் தாண்டி என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டேன். என் நேரம் வரும்; அதுவரை என் பயணத்தை தொடர்வேன்” என்று கூறியுள்ளார். மேலும், நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''படத்தின் வெளியீடு கடைசி நிமிட இடையூறுகளால் தள்ளிவிடப்படுவது 'அயோக்ய’த்தனம். தயாரிப்பாளர் மற்றும் நாயகருக்கு உண்டான மன உளைச்சலுக்கு அளவே இருக்காது” என்று கூறியுள்ளார்.

  • Express yourself