×  Welcome to Hixic! This Hixic page is tailored for our readers in TamilReturn to Englishபெண் சாதித்தால் ஏளனமா?; அட்டகத்தி ராஜாக்கள் 07

‘டிராய்’ படத்தில்’May the Gods keep the wolves in the hills and the women in our beds’ எனும் வசனம் வரும்.

    • sweh
      • sweh
      • Hixic Contributor

சமீபத்தில் ஆசிய ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார் பெண் ஒருவர். அவர் வெற்றி பேசப்பட வேண்டும் , காரணம் விளையாட்டு துறைக்கு நம் நாடு கொடுக்கும் முக்கியத்துவம் எல்லோரும் அறிந்ததே..! ஆனால், அதிகம் பேச ப்பட்டது அவர் ஷு பற்றியே..! 


அதன் பின் அவர் வேலை பற்றி. வெற்றி பெற்ற நிமிடம் பட்ட கஷ்ட மெல்லாம் சுருங்க சொல்லி தந்தைக்கு நன்றி சொன்ன பெண்ணை பொது வெளியில் ஒருவர் "ஏம்மா சொந்த பணம் போட்டு சீனா போய்ருக்கீங்க ஷு வாங்க காசில்லை யா..? இடிக்குதே" என்று கருத்து இடுகிறார். இன்னொருவர், "அவ அடிப்படை சம்பளமே ₹40 ஆயிரம்... மத்தியசர்க்கார் வருமானவரி துறை போஸ்ட் பெங்களூரில்!" என்கிறார்.

ஆணாக இருந்திருந்தாலும் இவர்கள் இப்படியான ஒரு கடும் சாதனையையும் சாதாரணம் ஆக்கி கருதிடுவர்கள்தான். சந்தேகமே இல்லை! ஆனால், அந்த அவர் ‘அவ’ என்று எப்படி குறிப்பிடாலாம்..? எது கொடுத்த தைரியம் அது..? தான், ஆண் என்பதா..? தன் அடையலாம் எங்கே தெரிய போகிறது என்பதா..?

தெருவில் இரண்டு ஆண்கள் சராமாரியாக திட்டி சண்டை போட்டு கொள்கிறார்கள் யாரும் கவனிக்கவில்லை. அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு கடந்து போகிறார்கள். அந்த வார்த்தைகளை காதில் கேட்க முடியாது. அத்தனையும் பெண் இழிவு சொற்கள். ஒருவனை அசிங்க படுத்தகூட இன்னொருவன் அம்மா வையோ, மனைவியையோதான் இழுக்கிறது சமூகம்.

பேச, பாட, நடிக்க, இயக்க, தெரிந்த  மினிமினுப்பு குறைய தொடங்கிய ஒரு நடிகர், தன் பப்ளிசிட்டிக்கு செய்தது என்ன என்று நாடறியும். சந்தைப்படுத்த உலகம் என்ன வேண்டுமானாலும் கையில் எடுக்கும்... அதில் பெண் ஆதி புள்ளி.

‘டிராய்’ படத்தில்’May the Gods keep the wolves in the hills and the women in our beds’ எனும் வசனம் வரும். கிரேக்கப் போர் பற்றியான படத்தில் வரும் இந்த வசனத்தின் எண்ண போக்கின் அடிப்படை மாறும்வரை, யார்- எவர் என்று பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் சர்வ சாதாரணமாக "அவள்... இவள்" என்று பேசும் கூட்டமும் இருக்கும்..!

உலகளாவிய பெண் முன்னேற்றம், விடுதலைக்கு நிறைய போராட்டங்கள் நடந்திருக்கின்றது. இந்த போராட்டம் பற்றி நாம் தெரிந்து கொண்டே ஆகவேண்டும். கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும்,  தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தான மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. 

திருவிதாங்கூர் நாட்டால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப்பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப்பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிரானணர்கள் முன்பு நாடார் சாதிப் பெண்கள் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. 

இந்த உடை கட்டுப்பாடுகள் மிக கடுமையாக கடைபிடிக்கப்பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே மக்களை உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப் படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822ம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைப்பெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப்பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டத்தில் கிறிஸ்துவ பெண்கள் மெலுடை அணியலாம் என்று ஆணை வர, மேலும் போராட்டங்களால் 1859ம் ஆண்டு உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டாலும், எல்லா பெண்கள் மேலாடை அணிய தொடங்கினர்.

அதன் பின் ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிந்து தனி இந்தியா ஆன பின்னும் திருவாங்கூர் சமஸ்தான ஜாதி கொடுமைகளை எதிர்த்து குமரி விடுதலை போராட்டம் நடந்தது. 1956 -இல் குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. இரண்டாம் ஐந்து ஆண்டு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டம் மேலோங்க நிறைய முன்னெடுப்புகள் நடந்தன.

நோர்வேயில் பெண்களுக்கு 40 சதவீதம் வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். பின்லாந்து நாட்டின் முக்கிய குறிக்கோள் பெண்கள் பாதுகாப்பு. பாலின சமத்துவம் நிறைந்த நாடு டென்மார்க் .

ஒரு நாள் பாலிஷ் செய்த பாலின, ஜாதி, மத, பாகுபாடுகள்கூட மறைந்து அனைவரும் சமம் என்ற நிலை உருவாகும். அதுவரை சமத்துவம்  பேசப்பட வேண்டும்.

முன்னேற்றம் காலம் எடுக்கும் !!

ஒதுக்கப்படும் பெண்கள்; அட்டகத்தி ராஜாக்கள் 06

  • Express yourself