×  Welcome to Hixic! This Hixic page is tailored for our readers in TamilReturn to Englishயூதம் - உலக மதங்கள் 01

1948ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவானது. யூதர்களுக்குத் தனி நாடு கோரிக்கைக்காகப் போராடிய டேவிட் பெங்கூரியோன் இஸ்ரேலின் முதல் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். (நில ஆக்கிரமிப்பு, யூத குடியேற்றம் என அதற்கு அடுத்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட அனைத்தும் பாலஸ்தீனிய அரேபியர்களை ஒடுக்கியே நடைபெற்றது.)

ஒற்றைக் கடவுள் நம்பிக்கை முறையினை கொண்ட உலகின் பழமையான மதம் யூத மதமாகும். அது 4000 வருடப் பழமையான மதமாகும். யூதர்களை இறைவன் தனது தூதர்களின் மூலம் தொடர்பு கொள்வான் எனவும், நன்மை செய்வோருக்கு நலனும் தீயவர்க்கும் கெடுதியும் அவன் அளிப்பான் என்றும் யூதர்கள் நம்புகின்றனர். 


அத்தகைய இறைத்தூதர் இன்னும் பிறக்கவில்லை என்பதையும் அவர்கள் நம்புகின்றனர். உலகம் முழுவதிலும் சுமார் ஒன்றரைக் கோடி யூதர்கள் வாழ்கின்றார்கள். அதில், பெரும்பான்மையானோர் அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் வசிக்கின்றனர். தாயின் மதம் யூதமாக இருக்கும் பட்சத்திலேயே அவர்கள் யூதர்களாவர் என்பது நம்பிக்கை.

தோராஹ்

தனக் (The Tanakh) அல்லது ஹீப்ரு பைபிள் யூதர்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிறிஸ்தவர்களின் விவிலிய பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதிகள் தான் ஹீப்ரு பைபிளின் முழு உள்ளடக்கமாகும். ஹீப்ரூ பைபிளின் முதல் நான்கு பகுதிகள், யூதர்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்களாகும். இதுவே தோராஹ் எனப்படுகிறது. யூதர்களின் மத தலைவர்கள் ராபிஸ் என அழைக்கப்படுகின்றனர். புனிதர் டேவிட்டின் ஆறு புள்ளி நட்சத்திரம் யூதர்களின் சின்னமாகக் கருதப்படுகிறது.

யூத வரலாறு

யூத நம்பிக்கையின் வரலாறு தோராஹ்வில் பல இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறைவன் முதன் முதலில் ஆப்ரஹாம் என்ற ஹீப்ரு மொழி பேசும் மனிதனுக்கே தன்னை வெளிப்படுத்தினார். ஆப்ரஹாமே யூத மதத்தைத் தோற்றுவித்தவர். ஆப்ரஹாமையும் அவனது சந்ததியினரையும் ஆண்டவன் தேர்ந்தெடுத்து அதன் மூலம் ஒரு சிறந்த தேசத்தை நிர்மாணிக்க முனைந்தார் என்பதே யூதர்களின் நம்பிக்கை ஆகும். ஆப்ரஹாமின் மகன் ஐசக், பெயரன் ஜேகப் போன்றோர் யூத மதத்தின் மையப் புள்ளிகளாவர்.

இஸ்ரேல் என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்து தனது பிள்ளைகளும் அவர்களின் சந்ததியினரும் இஸ்ரேலியர்கள் எனப் பெயர் பெறுவார்கள் என அறிவித்தார் ஜேக்கப். ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு, இறைத்தூதர் மோசஸ், எகிப்தில் அடிமைப் பட்டுக் கிடந்த இஸ்ரேலியர்களை நூற்றாண்டு அடிமை முறையிலிருந்து மீட்டெடுத்தார். மத நூல்களின் படி, இறைவன் தனது ”பத்து இறைமொழியை” மோசஸ் மூலமாகவே வெளிப்படுத்தினார்.

யூத கோவில்கள்

கி மு 1000ம் ஆண்டுகளில் அரசர் டேவிட் யூத மக்களை ஆட்சி செய்தார். அவரது மகன் சாலமன் ஜெருசலேமில் ஒரு கோவிலைக் கட்டினார். அதுவே யூதர்களின் புனித தளமாகக் கருதப்பட்டு வந்ததாக நம்பிக்கை. அந்த சாம்ராஜ்ஜியம் கி மு 931ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. கிமு 581ம் ஆண்டுகளில் பாபிலோனியர்கள் யூதர்களின் முதல் கோவிலை அழித்தனர். பல யூதர்களை நாடு கடத்தினர். இரண்டாவது கோவில் கி மு 516ம் ஆண்டு கட்டப்பட்டது. அது கிபி 70ம் ஆண்டுகளில் ரோமானியர்களால் அழிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் இடிக்கப்பட்டதற்கு பிறகு அவர்கள் அத்தகைய கோவில்களை தங்களுக்கென்று எழுப்பிக் கொள்ளவில்லை.

யூதமும் இன அழிப்புகளும்

வரலாறு முழுவதும் யூதர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக இனப்படுகொலைக்கு ஆளாகியிருக்கின்றார்கள். அதில் மிக முக்கியமானவை பின்வருவனவாம்:

  1. 1066ம் ஆண்டு டிசம்பர் மாதம், கிரானடா அரண்மனை தகர்க்கப்பட்டு சுமார் ஆயிரம் யூதர்கள் கொல்லப்பட்டனர்.
  2. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் புனிதப் போரில் பல்லாயிரம் யூதர்கள் கொல்லப்பட்டனர். பலர் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றமும் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  3. ஸ்பானிஷ் வெளியேற்றங்கள் : 1492ம் ஆண்டு ஸ்பெயின் ஆட்சியாளர்கள் அனைவரும் ஒரு அரச அறிவிப்பை வெளியிட்டனர். தங்களது அதிகார கைப்பற்றல்களில் இருக்கும் நாடுகளில், கிறிஸ்தவத்திற்கு மதம் மாற மறுக்கும் அனைத்து யூதர்களும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதில் சுமார் 200,000 யூதர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.பல்லாயிரக்கணக்கானோர் பயணத்தின் போதே உயிரை இழக்க நேரிட்டது.
  4. நாஜிக்களின் இன வெறிக்கு மட்டும் சுமார் அறுபது லட்சம் யூதர்கள் கொலை முகாம்களிலும் அடிமைப் பணியிடங்களிலும் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் உருவாக்கம்

இரண்டாம் உலகப் போரின் போது பல யூதர்கள் தங்களது தாய் நிலமாக தாங்கள் கருதி வந்த பாலஸ்தீனின் ஒரு பகுதிக்கு (மத்திய கிழக்கு பாலஸ்தீன பகுதி) திரும்பினர். தங்களுக்கென்று தனி நாடு ஒன்றினை உருவாக்குவதற்கு அங்கே ஒரு அமைப்பை அவர்கள் துவங்கினார்கள். அதன் பெயர் ஜியோன்ஸ்டு அமைப்பாகும். 1948ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவானது. யூதர்களுக்குத் தனி நாடு கோரிக்கைக்காகப் போராடிய டேவிட் பெங்கூரியோன் இஸ்ரேலின் முதல் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். (நில ஆக்கிரமிப்பு, யூத குடியேற்றம் என அதற்கு அடுத்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட அனைத்தும் பாலஸ்தீனிய அரேபியர்களை ஒடுக்கியே நடைபெற்றது. மத நம்பிக்கைக்காக யூதர்களின்பால் நிகழ்த்தப்பட்ட அனைத்து வன்முறையும் படுகொலைகளும், யூதர்களின் தனி நாட்டுக்காக, பாலஸ்தீனிய அரேபியர்களின் மேல் நிகழ்த்தப்பட்டது. அது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது)

ஷப்பாத்

ஷப்பாத் எனப்படுவது யூதர்களின் வழிபாடு மற்றும் ஓய்வு நாளாகும். இது வெள்ளிக்கிழமை சூர்யோதயத்தில் ஆரம்பித்து சனிக்கிழமை இரவு வரை அனுசரிக்கப்படுகிறது. சில யூத பிரிவினர் அந்நாளின் போது எந்த வகை உடல் உழைப்பும், மின் சாதன உபயோகமும் இன்ன பிற தவிக்கப்பட்ட காரியங்களையும் செய்வதில்லை. ஆனால் பொதுவாக ஷப்பாத் நாளன்று மற்ற யூதர்களுடன் கூடி தோராஹ்வினை வாசிக்கவும் விவாதிக்கச் செலவிடுவதே யூதர்களின் இறை நம்பிக்கை சார்ந்த பழக்கமாகும்.

  • Express yourself