×  Welcome to Hixic! This Hixic page is tailored for our readers in TamilReturn to English



மோடியின் தியானத்தை கிண்டல் செய்த பிரபல நடிகை..!

தியானம் செய்வதுபோல் ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு “திருமண போட்டோகிராபியை அடுத்து தியான போட்டோகிராபிதான் மிகப்பெரிய விஷயமாக இருக்கும்” என்று பாலிவுட் நடிகை ட்விங்கிள் கண்ணா மோடியை கிண்டல் செய்துள்ளார்.

    • Kirubamohan
      • Kirubamohan
      • ஹிக்ஸிக் சொற்சிற்பி

லோக்சபா தேர்தல் பிரச்சாரம் 17ம் தேதி முடிவடைந்த நிலையில், அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக உத்தரகாண்ட் சென்றார்.  கேதார்நாத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலில் வழிபாடு செய்தார். அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்ட பிரதமர், கேதார்நாத் மலைப்பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றில் 17 மணிநேரத்திற்கு மேலாக தியானம் செய்தார். 


கடல் மட்டத்திலி இருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில் இயற்கையாக அமைந்த குகையானாலும், பிரதமருக்காக அங்கு மின்சாரம், கழிப்பறை, குடிநீர், தொலைபேசி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்த குகையில் பிரதமர் தியானம் செய்த காட்சிகள் வெளியாகி, இணையத்தில் வைரலாகியது. 

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகையும் சமீபத்தில் மோடியை பேட்டி கண்ட நடிகர் அக்‌ஷய் குமாரின் மனைவியுமான ட்விங்கிள் கண்ணா மோடியின் தியானத்தை கிண்டல் செய்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ”கடந்த சில நாட்களாக ஏராளமான ஆன்மீக புகைப்படங்களைப் படங்களை பார்த்த பிறகு பயிலரங்கு ஒன்று ஆரம்பிக்கிறேன். அதில் எல்லோரும் கலந்து கொள்ளுங்கள். அதன் பெயர் ’தியான போட்டோகிராபி - போஸ்களும் கோணங்களும்’.

திருமண போட்டோகிராபியை அடுத்து தியான போட்டோகிராபிதான் மிகப்பெரிய விஷயமாக இருக்கும்” என்று ட்விங்கிள் கண்ணா குறிப்பிட்டுள்ளார். இதற்கு சமூகவலைதளங்களில் ஆஅதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

  • Express yourself