×  Welcome to Hixic! This Hixic page is tailored for our readers in TamilReturn to English



“எம்பி, எம்எல்ஏக்கள் வீடுகளை முற்றுகையிடுவோம்..!” - பேரா.ஜெயராமன்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த திட்டத்தை தடுத்து நிறுத்த லோக்சபா மற்றும் சட்டமன்றங்களில் குரல்கொடுக்காத எம்பி, எம்எல்ஏக்கள் வீடுகளை முற்றுகையிடப் போவதாக பேராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார்.

    • Kirubamohan
      • Kirubamohan
      • ஹிக்ஸிக் சொற்சிற்பி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்திற்கு கடந்த 11ம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வேதாந்தா நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளன. 


இந்நிலையில், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனும் ஒருபுறம் மக்களை திரட்டி போராடிவருகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயராமன் "காவிரிப்படுகை மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறது. மூன்று சுற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஒட்டுமொத்த பகுதியும் அழியப்போகிறது. முதல் சுற்றில் 5 ஆயிரத்து 94 சதுர கிலோமீட்டரில் 341 எண்ணெய் கிணறுகள் அமைகின்றன.

67 கிணறுகள் ஓஎன்ஜிசியியும், 274  கிணறுகள் வேதாந்த நிறுவனத்துக்கும் சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரிப்படுகையை ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட உள்ளது. இந்ததிட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று எல்லாக் கட்சிகளும் கூறியுள்ளனர். ஆனால் ஹைட்ரோகார்பன் சுற்றுச்சூழல் அனுமதி அளித்தவுடன் புதுச்சேரி முதல்வர் அந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டார். ஆனால் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி மௌனமாக இருப்பது அச்சத்தை  ஏற்படுத்தி இருக்கிறது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தின் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் 28ஆம் தேதி முதல் பரப்புரை பயணம் நடத்தப்பட இருக்கிறோம். மேலும் விவசாயிகள் நிலம்தர மறுக்கும் இயக்கத்தையும் தொடங்க உள்ளோம். லோக்சபா மற்றும் சட்டமன்றங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த குரல் கொடுக்காத எம்பி எம்எல்ஏக்கள் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத்திட்டமிட்டுள்ளோம். எதிர்காலத் தமிழகம் என்பது கார்ப்பரேட்டுகளுக்கு அல்ல தமிழக மக்களுக்கு ஆனது என்பதை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்டிஓ அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம்" என்றார்.

  • Express yourself