×  Welcome to Hixic! This Hixic page is tailored for our readers in TamilReturn to English



இப்போதே 2000 கிலோ இனிப்பிற்கு ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்..!

கருத்துக் கணிப்புகளை தொடர்ந்து நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பாஜக வேட்பாளர் ஒருவர், 2 ஆயிரம் கிலோ அளவிற்கு இனிப்பு வகைகளை தயார் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார்.

    • Kirubamohan
      • Kirubamohan
      • ஹிக்ஸிக் சொற்சிற்பி

கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி இந்த மாதம் 19ம் தேதிவரை 7 கட்டங்களாக 542 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. நாளை மறுநாள் (23ம் தேதி) தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. 


தற்போது, மும்பை வடக்கு லோக்சபா தொகுதியின் எம்பியாக பதவி வகிப்பவர் கோபால் ஷெட்டி. பாஜகவைச் சேர்ந்த இவர் இந்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பிரபல நடிகை ஊர்மிளா மட்டோன்கர் காங்கிரஸ் சார்பாக களமிறங்கியுள்ளார். 

இருவருக்கும் இடையில் இங்கு கடுமையான போட்டி நிலவிவருகிறது. சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் நாடு முழுவதும் பாஜக 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என வெளியாகிவரும் தகவல்கள் பாஜகவினருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மும்பை வடக்கு லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் 23ம் தேதி மக்களுக்கு வழங்குவதற்காக 2 ஆயிரம் கிலோ இனிப்பு வகைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியின்  முகமூடிகளை அணிந்தவாறு நூற்றுக்கணக்கானவர்கள் லட்டு, மைசூர்பா, பால்கோவா உள்ளிட்ட இனிப்புகளை தயாரித்து வருகின்றனர்.

  • Express yourself