×  Welcome to Hixic! This Hixic page is tailored for our readers in TamilReturn to Englishபெர்முடா முக்கோணம் எனும் பெரும் புரளி..!

அட்லாண்டிஸ் என்னும் பழங்கால தொழில்நுட்ப நகரம் கடலுக்கு அடியில் மூழ்கிய பகுதியே பெர்முடா முக்கோணமென்றும், அதிலிருந்து வெளிப்படும் காந்தப் புலனே இத்தகைய அசம்பாவிதங்களுக்குக் காரணமென்றும் ஒரு தரப்பு கூறத் துவங்கியது.

இந்த பூமியின் நிலப்பகுதியைக் காட்டிலும் கடல் மிகப் பெரியது. இந்த அதி நவீனத் தொழில்நுட்ப காலத்திலும்கூட விண்ணில் பறந்து கொண்டிருந்த விமானமோ அல்லது கடலில் செல்கின்ற கப்பலோ செயலிழந்து கடலில் மூழ்கி மாயமாகிப் போனது என்பன போன்ற செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. செயற்கைக் கோள்களும் GPSம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் நிச்சயமாக இத்தகைய ஆபத்துகள் அதிகமாகத்தான் இருந்திருக்கும்.


பழைய காலங்களில் உலகின் சில பகுதிகள் அமானுட சம்பவங்கள் நிறைந்ததாகவும், சபிக்கப்பட்ட இடங்களாகவும் கருதப்பட்டு வந்துள்ளது. அத்தகைய இடங்களில் மிகவும் புகழ் வாய்ந்ததாகவும், புதிராகவும் இருப்பது பெர்முடா முக்கோணமாகும். இது சாத்தானின் முக்கோணமென்றும் அழைக்கப்படுகிறது.

இந்த முக்கோண வடிவிலான கடல் பிரதேசம் கிழக்கில் அமெரிக்காவின் மியாமியில் துவங்கி பெர்முடா தீவிற்கும், தெற்கில் கரீபியன் தீவான போர்டோ ரிக்கோவிற்கும் இடைப்பட்ட கடல் பகுதியாகும். இந்த சாத்தானின் முக்கோணப் பகுதியில் பல அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 1945ம் ஆண்டு இந்த பகுதியில் சென்ற ஐந்து போர் விமானங்கள் ஒரே சமயத்தில் தடயங்கள் இல்லாமல் மாயமாகின.

அதற்கு பிறகான காலங்களில் நிறையச் சம்பவங்கள் பெர்முடா முக்கோணத்துடன் தொடர்புப்படுத்தி நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. விஞ்ஞானிகள் இத்தகைய சம்பவங்களுக்கு அறிவியல் ரீதியிலான பல பதில்களை அளித்தனர். விமான ஓட்டிகளின் கவனக்குறைவில் ஆரம்பித்து மோசமான வானிலை வரை அவர்களது வாதமும் தகுந்த நேரத்தில் ஏற்புடையதாகவே அமைந்தன.

ஆனால், சில ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய அனுமானங்களில் திருப்தி அடையவில்லை. அவர்கள் அந்த கடல் பகுதியில் அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஏதோ தீய, ஆபத்தான மர்மமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதாகக் கருதினர். முதன் முதலில், பெர்முடா ஆராய்ச்சியாளர்களான சார்லஸ் பெர்லிட்ஸ் பல அமானுட விளக்கங்களைத் தரலாயினார். அதற்குப் பிறகு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதே மாதிரியான அனுமானங்களும் கோட்பாடுகளும் கிளம்பின.

அட்லாண்டிஸ் என்னும் பழங்கால தொழில்நுட்ப நகரம் கடலுக்கு அடியில் மூழ்கிய பகுதியே பெர்முடா முக்கோணமென்றும், அதிலிருந்து வெளிப்படும் காந்தப் புலனே இத்தகைய அசம்பாவிதங்களுக்குக் காரணமென்றும் ஒரு தரப்பு கூறத் துவங்கியது. அத்தகைய  ‘அட்லாண்டிஸ் நகர மூழ்கு கோட்பாட்டை’  மறுக்கும் தரப்புகூட இயற்கையாகவே அந்த பகுதி கடலுக்கு மின்காந்த சக்தி அதிகமாக இருக்கும் காரணத்தினால்தான் இவ்வாறு நிகழ்கிறதென்று கூறினர்.

இவ்வுலகின் நடைபெறும் எந்த மர்ம நிகழ்வும் வேற்றுக்கிரக வாசிகளுடன் தொடர்புப் படுத்தப்படாவிட்டால் அது முழுமையான மர்ம நிகழ்வாக இருக்காது என்பதே CONSPIRACY கோட்பாட்டாளர்களின் சித்தாந்தம். பெர்முடா முக்கோணமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இதுவும் வேற்றுக்கிரக வாசிகளுடன் தொடர்புப்படுத்தப்பட்டது. வேற்று கிரக வாசிகளின் பூமியை நோக்கிய பயணப்பாதையின் முடிவே இந்த முக்கோணம் என்பதே அக்கருத்து. எட்கர் கேஸ் என்பவர் அட்லாண்டிஸ் நகரைப் பற்றிய தகவல்கள் கிடைக்குமாயின் பெர்முடா முக்கோண மர்மம் வெளிப்படும் என அறிவித்து அதைப் பற்றி ஆராயத் துவங்கினார்.

அதனால், சிறிதளவு நன்மையும் விளைந்தது. 1968ம் ஆண்டு பஹாமாவின் கடல் பகுதியின் பிமினி தீவில்  சுமார் அரை கிலோமீட்டர்கள் தொலைவிற்குச் சுண்ணாம்புக் கற்களாலான கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை பிமினி கடற்சாலை எனப் பெயரிடப்பட்டது. இவை இரு தீவுகளுக்கு இடைப்பட்ட கடலின் குறுக்கே மனிதனால் கட்டமைக்கப்பட்ட ஒன்றெனக் அவர்கள் கூறத்துவங்கினர். இந்த கட்டமைப்புகளை ஏற்கனவே நிலவி வந்த அட்லாண்டிஸ் நகரக் கோட்பாட்டிற்கு ஆதாரம் என வாதிட்டார்கள் அவர்கள்.

இந்த பிமினி கடற்சாலை மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதை பெரும்பாலான கடல் சார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மறுத்து வருகின்றனர். இந்த நிலப் பகுதியிலேயே இன்னும் தீர்க்கப்படாத பல நூறு கேள்விகள் இருக்கின்ற நிலையில் பெர்முடா முக்கோணத்தைப் போலவே மியாகே தீவு பகுதியில் மற்றொரு சாத்தானின் முக்கோணப் பகுதி இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தத் தீவு பிலிபைன்ஸ் நாட்டின் எல்லைக்குட்பட்ட எரிமலைத் தீவாகும்.

இத்தகைய மர்ம நிகழ்வுகள் யாவும் புனைவுகளுக்கு மட்டுமே ஏற்புடைய கோட்பாடுகள். நிகழ்வுகளையும் பழங்கால கட்டுக்கதைகளையும் இனைத்து புதியதோர் கோட்பாட்டை வடிவமைப்பவர்கள் யாவரும் இதுவரை அதை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரங்களையும் சாட்சியங்களாக முன்னிறுத்துவதில்லை. மிகைப்படுத்துதல், ஆராய்ச்சிகளைத் திரித்து தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளுதல் போன்றவையே இவர்களுக்கு ஆராய்ச்சி.

பெர்முடா முக்கோணம் எனக் கூறப்படும் அந்த கடல் பகுதி பல காலமாக அதிகமான வணிகப் போக்குவரத்து நடந்துகொண்டிருக்கும் பகுதியாகும். அந்தப் பகுதிகளில் குறிப்பிடப்படும்படியான விபத்துகள் நடைபெற்றாலும் அவை பிற பகுதிகளில் நடைபெறும் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிக மிகக் குறைவானதாகவே இருக்கிறது.

  • Express yourself